Print this page

தாஜுதீன் வழக்கில் அனுரவுக்கு நோட்டீஸ்

முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவுள்ளார்.

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், அவர், இன்று (27) நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார்.

ரகர் விளையாட்டு வீர் மொஹமட் தாஜுதீன் கொலையில், தகவல்களை மறைத்தார் என அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவருக்கு எதிராக, சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்டவுள்ள அதிக்குற்றப்பத்திரத்தை கையளிப்பதற்கே, நீதிமன்றத்துக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.