Print this page

சம்பள உயர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

இந்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும்போது ஜனாதிபதியினால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை 1750 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

அதன்படி சம்பள அதிகரிப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நடவடிக்கை நாளை (30) இடம்பெறவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி அடிப்படைச் சம்பளத்தை 1550 ரூபாவாக அதிகரிப்பதற்கும் வருகைக்கான கொடுப்பனவாக 200 ரூபாவை அரசாங்கம் செலுத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரவு - செலவுத் திட்டத்தில் இச் சம்பளத்துக்காக 5000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.