Print this page

அந்த மரணத்துக்கு அரசு பொறுப்பில்லை

February 01, 2026

இலங்கையில் உண்ணாவிரதம் இருந்து யாரும் உயிரிழந்ததில்லை என்றும், அப்படிப் உயிரிழந்தாலும் அதற்கான பொறுப்பை அரசு ஏற்க முடியாது என்றும் NPP கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆராச்சி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகம் முன்பு உயிரிழப்பை நோக்கி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாடசாலை அபிவிருத்தி அதிகாரிகளின் போராட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை கூறினார்.

அப்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையில் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த ஒரே நபர் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் மட்டுமே என்றும், அந்த அமைப்பு அவரை இறக்க அனுமதித்ததே அதற்கான காரணம் என்றும் லக்ஷ்மன் நிபுணஆரச்சி தெரிவித்துள்ளார்.