“தற்போது நாடு முழுவதும் ஆட்சி செய்யப்படுவது ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியின் பெலவத்தை அமைந்துள்ள தலைமையகத்தின் தேவைகளுக்கேற்பதாகும்” என்று சமகி ஜனபலவேகயின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்துள்ளார்.
எனினும், அந்தக் கட்சியின் தேவைக்கு ஏற்ப நாட்டை ஆட்சி செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கருத்து வெளியிடுகையில்,
“அரசின் கல்வி சீர்திருத்தங்களில் சில சந்தர்ப்பங்களில் நாம் எதிர்ப்பு தெரிவித்தோம். அந்த சீர்திருத்தங்களில் சில குறைபாடுகள் இருந்தன. ஜனதா விமுக்தி பெரமுன எதிர்க்கட்சியில் இருந்தபோது நடந்துகொண்ட விதமாக அல்லாமல் நாங்கள் செயற்படுகிறோம். நாம் எப்போதும் தடை செய்யும் நோக்கில் செயல்படவில்லை. முழு யோசனைக்கும் எதிராக இல்லை; அதில் உள்ள தவறுகளை திருத்த வேண்டிய அவசியத்தை தான் சுட்டிக்காட்டினோம். இன்று இந்த நாட்டின் ஆட்சி மற்றும் கொள்கைகள் அனைத்தும் JVP தலைமையகமான பெலவத்தை அலுவலகத்தின் விருப்பத்திற்கேற்ப தீர்மானிக்கப்படுகின்றன” என்றார்.