Print this page

உள்ளே சென்ற ஷிரந்திக்கு என்ன நடந்தது?

February 03, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறியுள்ளார். 

முன்னெடுக்கப்பட்டு வரும் பல விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ இன்றைய தினம் (03) காலை 9.30 மணியளவில் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு வருகை தந்திருந்தார். 

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், ஷிரந்தி ராஜபக்ஷ மேலும் இருவருடன் இணைந்து கூட்டு வங்கிக் கணக்காகப் பேணி வந்த "சிறிலிய" (Siriliya) கணக்கின் ஊடாக இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். 

ஷிரந்தி ராஜபக்ஷ பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிலிருந்து வெளியேறிய போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவான பெருமளவிலானோர் அங்கு குழுமியிருந்தனர்.