தமிழ் மக்களுடன் இலங்கை போர் செய்யவில்லை என்றும், உலகில் யாராலும் தோற்கடிக்க முடியாது என கூறப்பட்ட பயங்கரவாதத்தையே நாட்டின் மூன்று படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் தோற்கடித்ததாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் தேசிய அமைப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டார்.
நாட்டின் சுதந்திர தினத்தில், அந்த வெற்றியை பெருமையுடன் குறிப்பிடவும் இராணுவ வீரர்களை வீரர்கள் என்று அழைக்க அரசுத் தலைவருக்கு தைரியம் முதுகெலும்பு இல்லை என்றும், அதனை ஏற்றுக்கொள்ள அரசுக்கும் அரசுத் தலைவருக்கும் மனவலிமை இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். அதனால் அவர்கள் சிப்பாய்கள் என்று அழைக்கப்படுவதாக நாமல் சுட்டிக்காட்டினார்.