JVP யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆராய்தல் மற்றும் சமூக நலத்திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவுகளை மேலும் வளர்த்தெடுப்பதற்கு இந்தச் சந்திப்பு சிறந்த அடித்தளமாக அமைந்ததாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.