Print this page

பதுளை மாவட்டம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

February 08, 2026

பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ், பதுளை மாவட்ட செயலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருத்துகளை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது,

பதுளை மாவட்டத்தில் குறைந்த வயதில் கர்ப்பம் தரிக்கும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழங்கும் இடங்கள் போதிய அளவில் இல்லையெனவும் தெரிவித்தார்.

மேலும், பதுளையில் புதிய பிரச்சினையாக சைபர் வன்முறை அதிகரித்து வருவதாகவும், கல்வியறிவு குறைவு மற்றும் மதுபோதையின் காரணமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகம் பதிவாகுவது பதுளை மாவட்டத்திலேயே எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கையில் அதிகளவில் குழந்தைகள் மீதான குற்றச்செயல்கள் நடைபெறும் பகுதி பொலன்னறுவை மாவட்டத்தின் வெலிகந்த பகுதி எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.