உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் சாரா ஜெஸ்மின் (புலஸ்தினி மகேந்திரன்) தொடர்பில் சர்வதேச பொலிஸார் ஆழ்ந்த கவனம் செலுத்தி வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் மிக நீண்ட காலமாக தேடப்பட்டு வரும் இப்பெண் தொடர்பான சில தடயங்களை சர்வதேச பொலிஸாரால் வெளியிட முடியுமென, எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சாரா ஜெஸ்மின் இறந்துவிட்டதாக பரப்பப்படும் செய்திகளை அடியோடு நிராகரித்த அந்த அதிகாரி, இவை வெறும் வதந்திகள் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
எல்லோரும் எதிர்பார்ப்பதைப்போல சாராஜெஸ்மின் கைது செய்யப்பட்டால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரைக்கும் துலங்காதுள்ள பல உண்மைகள் வெளிவரும்.
இதனால், இக்கைது இடம்பெறக்கூடாதெனவும் சிலர் விரும்புகின்றனர். இந்த அச்சத்தின் அடிப்படையிலேயே சாரா ஜெஸ்மின் இறந்து விட்டதாக சிலரால் வதந்திகள் பரப்பப்படுகின்றன.