அரசு நிறுவனங்களில் பல உயர்பதவிகளில் விரைவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நிறுவனத் தலைவர்கள், தவிசாளர்கள் (Chairmen) மற்றும் இயக்குநர் சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல உயர்பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.