Print this page

மீண்டும் வந்த உகாண்டா பண விவகாரம்

February 11, 2026

அரசு பொறுப்பேற்றபோது குற்றச்செயல்கள் பரவலாக இடம்பெற்றிருந்த ஒரு நிலையை எதிர்கொண்டதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அந்த சூழலில், விசாரணைகள் உகாண்டாவை மட்டுமே மையப்படுத்தி இருக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது டுபாய் உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள நிதி தொடர்பாகவும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றும், டுபாயில் உள்ள பணத்தை கொண்டு வருமாறு நாமல் ராஜபக்ச எந்த நிலையிலும் சவால் விடுக்கவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்த அரசியல்வாதிகளும் தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், “உகாண்டாவில் உள்ள 18 மில்லியன் டொலர்களை எப்போது நாட்டிற்கு கொண்டு வருவீர்கள்?” என்ற ஊடகக் கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இதனை கூறினார்.