திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் நாட்டில் அமைதியின்மையை உருவாக்குவதற்காக அரசாங்கம் திட்டமிட்டு பயன்படுத்திய ஒரு உத்தி எனும் குற்றச்சாட்டை சர்வஜன பலய தலைவர் திலித் ஜெயவீர முன்வைத்துள்ளார்.
சர்வஜன பலய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அவர் கூறியதாவது,
“இந்த நாட்டிற்கு எதிராக ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படும் கலாசார தாக்குதலை கண்டிக்கவே நாம் தலையிட்டோம். திருகோணமலையில் நடைபெற்ற சம்பவம் அவற்றில் ஒன்றே தவிர, அதைவிடவும் தீவிரமான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன” என்றார்.
நாட்டில் குழப்பநிலையை உருவாக்கவும், இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கவும் அரசாங்கம் இவ்வாறான சம்பவங்களை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது என்பதே தங்களுக்கு தெளிவாக இருப்பதாக கூறினார்.
“நாட்டில் அமைதியின்மையை உருவாக்கி, இன ஒற்றுமையை பாதிக்க இந்த அரசு செயல்படுகிறது என்பதை நாங்கள் தெளிவாகக் காண்கிறோம்,” எனவும் அவர் குறிப்பிட்டார்.