Print this page

எதிர்க்கட்சியினருக்கு எதிராக அரசாங்கம் சதி

February 27, 2026

எதிர்க்கட்சியினருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்குகளில் சிக்கவைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

அரசாங்கம் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளையும் சமூக ஊடக செயற்பாட்டாளர்களின் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு எதிர்க்கட்சியை பலவீனப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, மக்களின் உரிமைகள் மற்றும் நாட்டின் பண்பாட்டை பாதுகாப்பதற்காக எதிர்க்கட்சியின் அனைத்து குழுக்களுடனும் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

“இன்றைக்கு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன. அந்த அச்சுறுத்தல்களை நாம் நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும். பல்வேறு நபர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை நாம் பார்த்துள்ளோம். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக குற்றச்சாட்டுகள் சுமத்தி, பல்வேறு வழக்குகளில் சிக்கவைக்க முயற்சிக்கப்படுகிறது. ஆகையால், இதற்கு எதிராக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எனது மற்றும் எங்கள் கட்சியின் முழுமையான ஒத்துழைப்பும் இருக்கும்.”