Print this page

எதிர்க்கட்சிகளுக்கு எதிராக புதிய அரசியல் கூட்டணி

அரசுக்கு எதிராக அல்லாமல் சிதறியுள்ள எதிர்க்கட்சிக்கு எதிராக புதிய கூட்டணியை அமைக்க உள்ளதாக ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார், 

திப்பட்டுவாவெ ஸ்ரீ சுமங்கள தேரரை சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தற்போதைய அரசு ஊழல் மற்றும் மோசடிகளின்றி நல்ல பாதையில் பயணித்து வருவதால், தாம் அரசுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதாகவும் ஃபீல்ட் மார்ஷல் குறிப்பிட்டார்.

மேலும், எதிர்க்கட்சியில் உள்ள குழுக்கள் ஒன்று சேர்ந்து இருப்பது மக்களின் நலனுக்காக அல்லாது, தங்களின் சொந்த நலன்களுக்காகவே என முன்னாள் இராணுவ தளபதி தெரிவித்தார்.