Print this page

வழமைக்குத் திரும்பும் எரிபொருள் விநியோகம்

எரிபொருள் விநியோகம் தற்போது வழமையான நிலைக்கு திரும்பி வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இந்நிலையைக் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நேற்று (03) காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை டீசல் 4 இலட்சத்து 15,740 லிட்டர் விநியோகிக்கப்பட்டதாக கூறினார்.

மேலும், ஓக்டேன் 95 வகை பெட்ரோல் 39,600 லிட்டரும், ஓக்டேன் 92 வகை பெட்ரோல் 4 இலட்சத்து 81,800 லிட்டரும் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.