Print this page

புதிய தலைமுறைக்கு அறிவுத்திறன் குறைவு என அதிர்ச்சி தகவல்

1997 முதல் 2012 வரை பிறந்த புதிய தலைமுறை Gen Z, அதற்கு முந்தைய “மில்லேனியல்” (Gen Y) தலைமுறையை விட அறிவுத்திறன் அளவில் குறைந்த நிலையில் உள்ளதாக சமீபத்திய அமெரிக்க ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளதாக பேராதெனிய கல்வி மருத்துவமனையின் வைத்தியர்-நீதியாளர் பாலித பண்டார சுபசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வை நடத்திய நரம்பியல் விஞ்ஞானியும் கல்வியாளருமான ஜெராட் குறே, அமெரிக்காவின் வாணிகம், அறிவியல் மற்றும் போக்குவரத்து தொடர்பான நிலையான செனட் குழுவிற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

மனித வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு அறிவுத்திறன் அதிகரித்து வந்தது (Flynn effect) எனப்படும் நிகழ்வு, Gen Z தலைமுறையிலிருந்து பின்னடைவு காணப்படுகிறது என்று அவர் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தொழில்நுட்ப முன்னேற்றம் கல்வியிலும் பரவலாக பயன்படுத்தப்படுதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக, இத்தலைமுறையினரின் மொழித்திறன், கணிதத் திறன், அறிவாற்றல், தர்க்க சிந்தனை மற்றும் பிரச்சினைகளை தீர்க்கும் திறன் ஆகியவை முந்தைய தலைமுறையை விட குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.