Print this page

ஐ.நா. செயலாளருக்கு ஜனாதிபதி விளக்கம்

இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில், ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளருக்கு, தொலைபேசி மூலம் விளக்கியதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கமளித்துள்ளார்.

மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில், ஐ.நா பொதுச் செயலாளர் அன்டினியோ குட்டாரெஸ், நேற்றைய தினம் (27) தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, மரண தண்டனை நிறைவேற்ற நினைப்பதன் காரணமென்னவெனக் கேட்டதாகவும் இதன்போது, அதற்கான காரணங்களைத் தான் அவருக்கு விளக்கியதாகவும், ஜனாதிபதி கூறியுள்ளார்.

பொலன்னறுவையில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.