Print this page

வீதி விபத்து 50% அதிகரிப்பு

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வீதி விபத்துகள் சுமார் 50% அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட சுமார் 50% அளவுக்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் போக்குவரத்து பிரிவு பிரதிபொலிஸ் மாஅதிபர் பி.ஜே சேனாதீர இந்த தகவலை வெளியிட்டார்.

இதனால் முக்கிய வீதிகளில் வாகனம் ஓட்டும் போது ஓட்டுநர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், வீதி விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.