Print this page

தேவையான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது

ஏப்ரல் மாத இறுதி வரை நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான எரிபொருள் கையிருப்புகள் ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்ரோலிய நிறுவனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா தெரிவித்ததாவது, 

அதன்படி, எரிபொருள் ஏற்றிய நான்கு கப்பல்கள்

  • ஏப்ரல் 14 – 15
  • ஏப்ரல் 17 – 18
  • ஏப்ரல் 21 – 22
  • ஏப்ரல் 29 – 30

இடையிலான காலப்பகுதிகளில் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த அனைத்து கப்பல் சரக்குகளும் இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளிலிருந்து வரவுள்ளதாகவும் கூறினார்.

இந்த எரிபொருள் கையிருப்புகள் நாட்டிற்கு வந்தடைந்த பின்னர், அந்நேரத்தில் நிலவும் சந்தை விலைகளின் அடிப்படையில் அவை கொள்முதல் செய்யப்படும் எனவும் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.