உலகின் பல நாடுகள் எண்ணெய் விலையை உயர்த்துவதுடன் எண்ணெய் விநியோகத்தையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது சில நாடுகளில் அரச சேவைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்காக பயன்படுத்தப்படும் எரிபொருள் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் நிலையும் உருவாகியுள்ளது என அவர் கூறினார்.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நண்பர் ஒருவருடன் பேசியபோது, அங்கு எரிபொருள் விலை சுமார் 60% உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்ததாகவும் கூறினார்.
இருப்பினும் இலங்கை இன்னும் அந்த நிலைக்கு செல்லவில்லை என்றும், தற்போதைய சூழ்நிலையை கட்டுப்படுத்த அரசு முயற்சி செய்து வருவதாகவும் சமந்த வித்யாரத்ன குறிப்பிட்டார்.
நாட்டிற்கு வெளியே நடைபெறும் போரின் காரணமாக உருவான இந்த நெருக்கடியை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என்பதையும், இதை புத்திசாலியான மக்கள் புரிந்து கொள்வார்கள் எனவும் அவர் வலியுறுத்தினார்.