நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில், அரசாங்க ஊழியர்களுக்கு வாராந்தம் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
இது தவிர,வாரத்தின் ஏனைய நான்கு வேலை நாட்களிலும், எத்தகைய எண்ணிக்கையில் ஊழியர்களை கடமைக்கு அழைக்க வேண்டும் என்பது தொடர்பான முடிவுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்கான அதிகாரம் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதேவேளை, அனைத்து அரச விழாக்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.