Print this page

எதிர்க்கட்சியின் நடத்தை குறித்து ஹர்சன கடும் விமர்சனம்

தாம் எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் கொரோனா பிரச்சினை ஏற்பட்டபோது, முகக்கவசங்கள் தயாரித்தலும், இடங்களை கிருமிநாசினி தெளித்தலும் போன்ற நடவடிக்கைகளின் மூலம் முடிந்தவரை உதவி செய்ததாக நீதித்துறை அமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், தேவையான இடங்களில் அரசை விமர்சித்தாலும் பொறுப்புடன் நடந்துகொண்டதாகவும், தற்போதைய எதிர்க்கட்சியின் செயல்பாடு அதற்கு மாறுபட்டதாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சிலர் அதிகாரத்தைப் பெறுவதற்காக தவறான தகவல்களை பரப்பி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

குறிப்பாக, சில ஊடக பணியாளர்கள் எரிபொருள் வரிசைகளில் மக்களிடம் கருத்துகளைப் பதிவு செய்து அதனை எதிர்மறையாக பயன்படுத்துகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.