2026 உலக மகிழ்ச்சி குறியீட்டில் (World Happiness Index), இலங்கை குறைந்த மகிழ்ச்சியுடைய நாடுகளில் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
Oxford University Wellbeing Research Centre வெளியிட்ட இந்த அறிக்கையின் படி, இலங்கை 4.0 புள்ளிகள் பெற்று 134வது இடத்தில் உள்ளது.
2025 ஆம் ஆண்டில் 133வது இடத்தில் இருந்த இலங்கை, இவ்வாண்டு மேலும் ஒரு இடம் பின்னடைந்துள்ளது. இலங்கைக்கு கீழே உள்ள ஒரே ஆசிய நாடாக ஆப்கானிஸ்தான் காணப்படுகிறது.
இந்த தரவரிசையில் முதல் இடத்தை Finland பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து Iceland, Denmark, Costa Rica மற்றும் Sweden ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
மேலும், Norway, Netherlands, Israel, Luxembourg, Switzerland, New Zealand, Mexico, Ireland, Belgium மற்றும் Australia ஆகியவை உலகின் மிக மகிழ்ச்சியான 15 நாடுகளில் இடம்பெற்றுள்ளன.
இந்த அறிக்கை, நாடுகளின் வாழ்க்கைத் தரம், சமூக பாதுகாப்பு, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் மக்களின் நலநிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படுகின்றது.