Print this page

அமெரிக்க போர் விமானங்கள் விவகாரம்: ஜனாதிபதி விளக்கம் அளிக்க வேண்டும் – திலித்

 

அமெரிக்க போர்விமானங்கள் இரண்டு மத்தள விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரியதாகவும், அதனை தாம் நிராகரித்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தது, நாட்டின் ஒரு குறிப்பிட்ட தரப்பினரை திருப்திப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டதாக சர்வஜன பலய தலைவர் திலித் ஜயவீர குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த வகையான அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட தூதரகங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா உண்மையிலேயே இப்படியான கோரிக்கையை முன்வைத்திருந்தால், அது எந்த அடிப்படையில் முன்வைக்கப்பட்டது என்பது குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாடு மக்களிடம் வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், அமெரிக்காவுடன் கையெழுத்திடப்பட்டிருக்கும் ரகசிய ஒப்பந்தங்கள் ஏதேனும் உள்ளதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் என திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.