இலங்கைக்கு நிலக்கரி வழங்கிய நிறுவனத்திற்கு அதிகளவிலான அபராதம் விதிக்கப்பட்டதால், அந்த நிறுவனம் திவாலாக அறிவித்தால் நாட்டிற்கு நிலக்கரி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.
இந்நிறுவனம் ஏற்கனவே சுமார் 2 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான அபராதத்தை செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போதைய சூழ்நிலையில் நிலக்கரியின் தரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பு நாட்டிற்கு இல்லையெனவும், புதிய நிலக்கரி கொண்டு வர மாதங்கள் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தாம் ஏற்பட்ட தவறை நியாயப்படுத்தவில்லை எனினும், நாட்டில் எந்தவித வளங்களும் அதிகமாக இல்லாத நிலை தொடர்வதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் கூறினார்.