Print this page

இலங்கையின் கடன் சுமை அதிகரிப்பு

2025ஆம் ஆண்டின் இறுதிக்குள், அரசாங்கம் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் தொகை ரூபாய் 29,994.7 பில்லியன் வரை உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், உள்நாட்டு கடன் தொகை ரூபாய் 18,675.3 பில்லியனாகவும், வெளிநாட்டு கடன் தொகை ரூபாய் 11,319.4 பில்லியனாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2024ஆம் ஆண்டின் இறுதியில் மொத்தக் கடன் ரூபாய் 28,738.7 பில்லியனாக இருந்த நிலையில், 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் அது ரூபாய் 1,255.99 பில்லியனால் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.