Print this page

கந்தக்காடு கைதிகள் தப்பியோட்டம்!

கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகள் நேற்று நண்பகல் வேளையில் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

தப்பியோடிய கைதிகள் போதைப்பொருளுக்கு பலத்த அடிமையானவர்கள் எனவும், அவர்கள் 29 முதல் 34 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தப்பியோடிய கைதிகளை கைது செய்வதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கைதிகளுக்கிடையே ஏற்படும் மோதல்கள் மற்றும் தப்பியோடும் சம்பவங்கள் அவ்வப்போது இடம்பெற்று வருகின்ற நிலையில், நேற்றைய சம்பவத்தை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.