Print this page

இன்று மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை

இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கால் மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடைக்கிடையாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் வாய்ப்பும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை நேரங்களில் தற்காலிக பலத்த காற்றும், மின்னலும் ஏற்படக்கூடியதால், அவற்றால் ஏற்படும் அபாயங்களை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலப்பகுதியாகிய ஏப்ரல் 05 முதல் 15 வரை, இலங்கை அமைந்துள்ள அகலாங்குகளுக்கு நேராக சூரியன் மேல் பகுதியில் தோன்றும்.

அதன்படி, இன்று (06) மதியம் 12.13 மணியளவில் பேருவளை, குருளுபெத்த, ரக்குவான, கொடகவெல, உடவலவ மற்றும் தணமல்வில பகுதிகளில் சூரியன் நேர்குத்தாக மேல் பகுதியில் காணப்படும்.