போதுமான மின்உற்பத்தி ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் ஏப்ரல் 03ஆம் திகதி முதல் நாடு முழுவதும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் நிலக்கரி விநியோக பிரச்சினையே மின்சார அமைப்பு பாதிக்கப்படுவதற்கான முக்கிய காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நுரைசோலை மின் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தபோது, அதன் மூன்று உற்பத்தி அலகுகளிலும் மின்சார உற்பத்தி திறன் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
• 1ஆம் அலகு – சுமார் 216 மெகாவாட் மட்டுமே உற்பத்தி; 54 மெகாவாட் பற்றாக்குறை
• 2ஆம் அலகு – 235 மெகாவாட் உற்பத்தி; 35 மெகாவாட் பற்றாக்குறை
• 3ஆம் அலகு – 236 மெகாவாட் உற்பத்தி; 34 மெகாவாட் பற்றாக்குறை
இதனால், லக்விஜய மின் நிலையத்திலிருந்து தேசிய மின்சார அமைப்புக்கு கிடைக்க வேண்டிய மொத்த திறனில் 123 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், நிலக்கரி தொடர்பான மோசடி மற்றும் ஊழல் காரணமாக மின்உற்பத்திக்கு தேவையான வளங்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனாலேயே மின்வெட்டுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தனது சமூக ஊடக பதிவில் வலியுறுத்தியுள்ளார்.