உலக சந்தையில் எரிபொருள் விலைகள் 20% முதல் 35% வரை அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்களை சரிசெய்ய புதிய முறையை அறிமுகப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது என நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
தற்போதைய உலகளாவிய பொருளாதார சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள இந்த அதிக விலை உயர்வை முன்னிட்டு, பழைய விலை நிர்ணய முறைப்படி தொடர்ந்தும் விலைகளை மாற்றுவது சிரமமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால், குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு குறைந்த பாதிப்பு ஏற்படும் வகையில் புதிய விலை சூத்திரம் அல்லது முறை உருவாக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், இந்த புதிய முறை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் (IMF) அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த மாற்றம், உலக சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப உள்ளூர் பொருளாதாரத்தை சமநிலைப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.