Print this page

மகிந்தவை இலக்குவைத்து போலி பிரசாரம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் 8 வங்கி கணக்குகளில் சுமார் 93 ஆயிரம் கோடி ரூபாய் பணம் வாய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல் தொடர்பில் CID யில் நேற்று (16) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுஜன முன்னணி கட்சியின் செயற்பாட்டாளரான பசன் கஸ்தூரி என்பவரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகிந்தவை இலக்குவைத்து போலி பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முறைபாட்டில் தெரிவித்து, பெருந்தொகை பணம் இருப்பதாக திட்டமிட்ட அடிப்படையில் இந்த பொய் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி தரப்பிலிருந்து முன்னெடுக்கப்படுவது தெளிவாக தெரிகின்றது எனவும் சமூக ஊடக கணக்குகளை அவதானித்தாலும் அவற்றில் இடப்படும் பதிவுகளை அவதானித்தாலும் இது வெளிப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.