2026 ஆம் ஆண்டின் இதுவரை காலப்பகுதியில் இலங்கை முழுவதும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,082 ஆக பதிவாகியுள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, ரத்னபுரம் மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும், குறிப்பாக கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் அதிகமான நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சமூக மருத்துவ நிபுணர் டாக்டர் ப்ரஷிலா சமரவீரா தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் இதுவரை டெங்கு தொடர்பான மரணங்கள் 12 ஆக பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், அது டெங்குவா என்பதை உறுதி செய்ய உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவரின் ஆலோசனை பெறும் வரை காய்ச்சலுக்கு Paracetamol தவிர வேறு எந்த மருந்தையும் பயன்படுத்த வேண்டாம் என்றும், கொசு கடியிலிருந்து பாதுகாப்பதற்காக கொசு விரட்டிகளை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.