Print this page

நாட்டில் வாழவே பயமாக இருக்கிறது - திஸ்ஸ

கபில சந்திரசேன தொடர்பான சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தற்போதைய அரசாங்கத்துக்கு கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,


“எனக்கு தனிப்பட்ட முறையில் பார்த்தால், இப்போது இந்த நாட்டில் வாழவே பயமாக இருக்கிறது. இல்லையெனில் ஒருவரை முடித்துவிடுகிறார்கள், அல்லது முடிக்க ஏற்ற சூழலை உருவாக்குகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையை 1988/89 காலப்பகுதியின் அச்சுறுத்தல் சூழலுடன் ஒப்பிட்ட அவர், “நாங்கள் இதைப் பற்றித்தான் மக்களிடம் கூறினோம். 88/89 காலத்தில் நடந்தவற்றை மக்களுக்கு நினைவூட்டினோம். ஆனால் அனைத்தையும் மறந்து மக்கள் வாக்களித்தார்கள்” என்றும் கூறினார்.