மாலிமா அணியினர் வெற்றி பெற்ற கூட்டுறவு சங்கங்களில் தற்போது அதிகாரம் இழந்திருந்தாலும், அதை அரசாங்கத்தின் மீது உள்ள மக்கள் ஆதரவு குறைந்ததற்கான அறிகுறியாக தாம் பார்க்கவில்லை என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் அந்தச் சங்க உறுப்பினர்களுக்குள் நடைபெறும் ஒன்றாகும் என்றும், மக்கள் அரசாங்கத்தை விமர்சிப்பதன் மூலம் கூட அரசாங்கத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருப்பது உறுதியாகிறது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
மாலிமா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு முன்வைக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகள் காரணமாக தேர்தலில் வாக்களிக்காத மக்கள், குறிப்பாக கொழும்பு நடுத்தர வர்க்கத்தினர், தற்போது அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து திருப்தியடைந்துள்ளதாகவும், இதனால் அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு மேலும் வலுவடைந்துள்ளதாகவும் அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.