டுபாயில் உள்ள சேவை வழங்குநரின் மின்னஞ்சல் கணக்கு ஹக் செய்யப்பட்டதன் காரணமாக AED 974,000
(ஐக்கிய அரபு அமீரக திர்ஹாம்) தொகை மோசடியாக வேறு கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக SriLankan Airlines நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, இந்தியாவின் சென்னை அலுவலகத்தில் பணியாற்றிய சில ஊழியர்கள், விலைப்பட்டியல் மற்றும் கட்டண விவரங்களை மாற்றி INR 22 மில்லியன் தொகையை முறைகேடாக கையாடல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இரு சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.