Print this page

அதிகாரம் கிடைத்தால் ராஜபக்ஷ குடும்பத்தை நாட்டைவிட்டே விரட்டி அடிப்பேன்

கபில சந்திரசேன மரணத்தின் பின்னால் பெரிய மர்மம் இருப்பதாகவும், அதன் நேரடி அரசியல் பலன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபாக்சவுக்கு கிடைப்பதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவம் 2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு ஒப்பானது என்றும், அப்போது அந்த தாக்குதலின் அரசியல் பலன்கள் ராஜபக்ஷ குடும்பத்திற்கு சென்றதுபோல, இம்மரணத்தினாலும் தொடர்புடைய 60 மில்லியன் பண விவகாரத்தைத் தாண்டியும் மிகப்பெரிய நன்மை மீண்டும் மஹிந்தவுக்கு கிடைக்கும் என அவர் கூறினார்.

மேலும், மஹிந்தவின் கடந்தகால நடவடிக்கைகள், அவரின் குணநலன் மற்றும் முந்தைய செயல்களைப் பார்க்கும்போது, இந்தச் சம்பவமும் அவரின் அறிவோ அல்லது அனுமதியோடு நடந்ததா என்ற சந்தேகம் தமக்கு இருப்பதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

போர்காலம் குறித்து கருத்து தெரிவித்த அவர், யுத்த காலத்தில் எந்தப் போர்க்களத்திலும் மஹிந்த ராஜபக்சவை தாம் பார்த்ததில்லை என்றும், அவர் குறைந்தபட்சம் ஒரு கோப்ரல் பதவியில்கூட இராணுவத்தில் பணியாற்றவில்லை என்றும் கூறினார்.

ஒரு நாட்டை காப்பாற்ற வேண்டுமெனில், இராணுவ உடை அணிந்து உண்மையான இராணுவ பிரதிநிதியாக முன்னணிக்குச் செல்ல வேண்டும் என்றும், கொழும்பில் இருந்து கூச்சலிடுவதால் நாடு காப்பாற்ற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டிற்காக உயிர்தியாக மனப்பாங்குடன் எதிரியை எதிர்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் அவர் கூறியதாவது:

“யுத்த காலத்தில் மஹிந்த போர்க்களத்தில் இருந்ததை நான் பார்த்ததில்லை. எங்களுக்குத் தெரிந்தவரை அவர் ஒரு கோப்ரலாகவாவது இராணுவத்தில் இருந்ததில்லை. நாட்டை காப்பாற்ற வேண்டுமெனில் போருடை அணிந்து உண்மையான இராணுவ வீரராக முன்னணியில் நிற்க வேண்டும். கொழும்பில் இருந்து சத்தமிட்டால் எப்படி நாட்டை காப்பாற்றியதாக சொல்ல முடியும்? உயிரை பணயம் வைத்து எதிரியை எதிர்கொள்ள வேண்டும். ராஜபக்ஷர்கள் என்பது ஊழலால் பெரிதாக காட்டப்பட்ட கதாபாத்திரங்கள். மது, கமிஷன் மற்றும் லஞ்சத்தின் மூலம் வளர்ந்தவர்கள். அவர்களை ஒடுக்குவது மிகவும் சிறிய விஷயம். எனக்கு அதிகாரம் கிடைத்தால் ராஜபக்ஷ குடும்பம் இந்த நாட்டிலேயே இருக்காது.”