Print this page

மதவாச்சி தேர்தலில் ஆளும் NPP அணிக்கு தோல்வி

மதவாச்சி பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் NPP அணியை தோற்கடிக்க SJB தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சிக்கு முடிந்துள்ளது.

இந்தத் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி 66 உறுப்பினர் பதவிகளை கைப்பற்றியுள்ள நிலையில், ஆளும் NPP அணிக்கு 52 உறுப்பினர் பதவிகள் மட்டுமே கிடைத்துள்ளன.

அந்தச் சங்கத்தின் 120 உறுப்பினர் பதவிகளுக்கான பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும் வாக்குப்பதிவு மதவாச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 20 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது.

இதன்போது, இரண்டு உறுப்பினர் பதவிகளைத் தேர்வு செய்ய வேண்டியிருந்த ஒரு வாக்குச்சாவடியில் தேவையான குறைந்தபட்ச உறுப்பினர் பங்கேற்பு இல்லாத காரணத்தால், அந்த வாக்குப்பதிவு கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.