முன்னாள் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரி சுரேஸ் சலே ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி எனவும், பிள்ளையான் உட்பட சஹரான் குழுவுக்குப் பல வழிகளில் இந்தக் கொலைகளைச் செய்ய அவர் வழிகாட்டியுள்ளதாகவும் பிரதி சட்டமா அதிபர் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சுரேஸ் சலே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், அவர் மீதான பல குற்றச்சாட்டுக்கள் சட்டமா அதிபரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அசாத் மெளலானா சாட்சியம்:
பிள்ளையானின் முன்னாள் இணைப் பதிகாரியாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் அசாத் மெளலானா, இவர்களுக்கு எதிராகத் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளைச் சத்தியக் கடதாசி மூலம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் பட்சத்தில், இலங்கைக்கு வருகை தந்து நீதிமன்றத்தில் ஆஜராகிச் சாட்சியம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.