Print this page

ஒவ்வொரு மூன்று பேரில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம்

நாட்டில் ஒவ்வொரு மூன்று பேரில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் காணப்படுகின்றது என சுகாதார அமைச்சு எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொற்றாத நோய்கள் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்ததாவது, நாட்டில் ஏற்படும் மரணங்களில் சுமார் 34 சதவீதம் உயர் இரத்த அழுத்தத்தால் உருவாகும் நோய்களினால் ஏற்படுகின்றன என்பதாகும்.

இது சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட மருத்துவர் கூறியதாவது:

“உயர் இரத்த அழுத்தம் இருப்பது பல நேரங்களில் எங்களுக்கு உணரப்படாது. குறிப்பாக 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒருமுறை அல்லது ஆண்டிற்கு ஒருமுறை இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக்கொண்டால், அது அதிகமாக உள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும். எங்கள் நாட்டில் பொதுவாக மூன்று பேரில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது. இதில் 63.9% பேர் சிகிச்சை பெறவில்லை. மேலும் சிகிச்சை பெறுபவர்களில் 39.1% பேரின் இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் இல்லை. அதிக உப்பு கொண்ட உணவுகளை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும்” என்றார்.