web log free
May 24, 2026

ராஜபக்சக்கள் தூக்கிட்டுக் கொள்வதே சிறந்த வழி!

ராஜபக்ச குடும்பத்துக்கு தற்போது மீதமுள்ளவை மூன்று வழிகள் மட்டுமே என இடதுசாரி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

ராஜபக்சர்கள், சனத் நிஷாந்த சென்ற பாதையிலோ அல்லது கபில சந்திரசேன சென்ற வழியிலோ செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அல்லது,  சனத் நிஷாந்தவின் சகோதரர் போல சிறையைத் தேர்வு செய்ய வேண்டியிருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இது தனிப்பட்ட பழிவாங்கல் அல்ல என்றும், மக்கள் நீதி கோரி தொடங்கிய போராட்டம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்தப் போராட்டம் முடிவுக்கு வரும் வரை அதை கைவிடப் போவதில்லை என்றும் சமீர பெரேரா மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd