தற்போதைய அரசை கவிழ்த்து, சிதறிப்போன எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வருவதையும் எதிர்த்து தாம் போராடி வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும், அவர்களின் சிந்தனையை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் வலியுறுத்தினார்.
ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பொதுஜன பெரமுனா தரப்புகள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாடு மீண்டும் மீள முடியாத அளவுக்கு ஒரு பேரழிவுக்குள் தள்ளப்படும் என சரத் பொன்சேகா எச்சரித்தார்.
தாம் ஜனாதிபதியை சந்தித்து நட்புறவான கலந்துரையாடல்களில் ஈடுபட்டாலும், பதவிகள் அல்லது சலுகைகள் பெறுவது குறித்து எந்த உரையாடலும் இடம்பெறவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.




