தென்மேல் பருவப் பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதன் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் அடுத்துவரும் சில தினங்களுக்கு அதிகரித்த மழைவீழ்ச்சி காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன் அடிப்படையில் சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும் , வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.