Print this page

மகிந்த ராஜபக்ஷவை தூக்கில் போட வேண்டும்!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அவர்கள் நாட்டைச் சீர்செய்ததாக தாம் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

“ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உள்ளிட்ட இந்த அரசு எவ்வளவு பெருமையாகப் பேசியாலும், மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர்கள் இந்த நாட்டைச் சீர்திருத்தியதாக நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

இந்த நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்ற வேண்டும். அந்தப் பணியைச் செய்த நாளில்தான் இந்த அரசு மக்களுக்கான தனது பொறுப்பை நிறைவேற்றியது என்று நாம் ஏற்றுக்கொள்வோம். இதுவே யதார்த்தம். இதுவே உண்மை.

எங்களிடம் அதிகாரம் இல்லாவிட்டாலும் உண்மையைப் பேச அஞ்சுவதில்லை. 24 மணி நேரத்திற்குள் கைது செய்யலாம். மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை மரண தண்டனையே.”

இந்தக் கருத்துகளை சரத் பொன்சேகா ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்தார்.