முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு 4 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் செவ்வாய்க்கிழமை (09) தீர்ப்பளித்துள்ளார்.
சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, அவருக்கு 18 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சரண குணவர்தன தேசிய லோத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், அந்தச் சபைக்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைக் கொள்வனவு செய்ததில் அரசாங்கத்திற்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக நான்கு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்கின் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் பிரதிவாதி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் நீதிமன்ற நீதிபதி ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா நான்கு ஆண்டுகள் வீதம் கடுழியச் சிறைத்தண்டனை விதித்தார்.
எனினும், இந்தத் தண்டனைகளை ஏககாலத்தில் (ஒரே காலப்பகுதியில்) அனுபவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதற்கமைய, அவர் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும்.


