Print this page

யோஷிதவுக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (17) காலை கைதுசெய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிப்பதாக அறிவித்தார்.