கண்டி மாவட்டத்தில் உள்ள சமகி ஜன பலவேகய ஆதரவாளர்கள் அனைவரும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க விருப்பம் கொண்டுள்ளதாக கண்டி மாவட்ட SJB நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்தானி கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியில் நடைபெற்ற கண்டி மாவட்ட சமகி ஜன பலவேகயின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், சமகி ஜன பலவேகய எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், வரவிருக்கும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில் இணைந்து போட்டியிட்டால், அந்தத் தேர்தலில் சிறப்பான வெற்றியைப் பெற முடியும் என்ற நம்பிக்கையையும் சமிந்தானி கிரியெல்ல வெளிப்படுத்தினார்.