Print this page

ஒப்பந்தத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் ஒன்றிணைந்த எதிரணி

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளது.

கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“நெறிமுறையற்ற ஒப்பந்தங்களை அடுத்த 90 நாட்களுக்குள் அங்கீகரிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.

இந்த ஓப்பந்தங்களை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்க அரசாங்கம் முற்படும் போது, ஒன்றிணைந்த எதிரணி அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்.

சோபா உடன்பாடு, கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவை உடன்பாடு மற்றும் மிலேனியம் சவால் நிதிய உடன்பாடு ஆகியவற்றைத் தவிர, ஒரு சமஷ்டி அரசியலமைப்பை கொண்டு வரவும் அரசாங்கம் முயற்சிக்கும், இது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.