Print this page

கைதிகளின் பட்டியலை அனுப்புமாறு கட்டளை


மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பிலான தகவல்கள் அடங்கிய பட்டியலை, அனுப்பிவைக்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு தகவலறியும் ஆணைக்குழு கட்டளையிட்டுள்ளது.


மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் விவரங்களை. மாற்றுக் கொள்கைக்கான நிலையம் தகவலறியும் சட்டத்தின் கீழ் கோரியிருந்தது.
எனினும், ஜனாதிபதியினால் கையொப்படமிடப்பட்ட மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தொடர்பிலான ஆவணங்கள் எவையும் தமக்கு கிடைக்கவில்லையென சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் நீதிமன்ற மற்றும் மறுசீரமைப்பு அமைச்சு பதில் அனுப்பியுள்ளது.


இந்நிலையில், மேற்படி விவகாரம் தொடர்பில் தகவலறியும் ஆணைக்குழுவின் நேற்று(09) இடம்பெற்ற அவசர விசாரணையின் போதே, மேற்கண்டவாறு கட்டளையிடப்பட்டுள்ளது.