Print this page

முஸ்லிம் பெண்களின் படங்களுடன் 2 தொலைபேசிகள் மீட்பு

உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைத் தாக்குதல் நடத்திய சஹ்ரானின் மனைவியான அப்துல் காதர் பாத்திமாவின் கையடக்க தொலைபேசி, உடைத்து நொறுக்கி வீசப்பட்ட இடத்திலிருந்து, திவுலப்பிட்டிய மீரிகம வீதியில், பொல்தேவெல பிரதேசத்திலிருந்து அதிநவீன கையடக்க தொலைபேசிகள் இரண்டு, நேற்று910) மீட்கப்பட்டன என பல்லேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

சஹ்ரானின் மனைவி வழங்கிய தகவல்களின் பின்னர், திவுலப்பட்டிய - மீரிகம வீதியில், உதுகடே சந்தியில், ஜூன் 29, 30ஆம் திகதிகளில் வயலொன்றிலிருந்து சஹ்ரானின் மனைவியின் கையடக்க தொலைபேசியின் பாகங்கள் உடைத்து நொறுக்கி வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன.

Last modified on Thursday, 11 July 2019 02:41