Print this page

பூங்காவுக்குள் நுழையும் வாகனங்கள் மட்டுப்படுத்தப்படும்

இலங்கையிலுள்ள தேசிய பூங்காக்களுக்குள் உள்நுழையும் வாகனங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யால, உடவலவ, குமண ஆகிய தேசிய வனப்பகுதிகளுக்குள், நாளாந்தம் அதிகளவான வாகனங்கள் உள்நுழைவதால், வனப் பாதுகாப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பிரச்சினைகள் காணப்படுவதாக, அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, இப்பிரச்சினைகளுக்கான தீர்வாகவே, பூங்காக்களுக்குள் உள்நுழையும் வாகனங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பூங்காவுக்கான பிரவேசக் கட்டணத்தை அதிகரிக்கவும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.